Connect with us

உயிரே போனாலும் என் நண்பன் அழகுதான்…அசோகனின் சவப்பெட்டிக்குள் ஜெய்சங்கர் செய்த காரியம்?…

jaishankar ashokan

Tamil Flash News

உயிரே போனாலும் என் நண்பன் அழகுதான்…அசோகனின் சவப்பெட்டிக்குள் ஜெய்சங்கர் செய்த காரியம்?…

தென்னகத்தின் ‘ஜேம்ஸ்பாண்ட்’ என அழைக்கப்பட்டவர் ஜெய்சங்கர். இளமை ததும்பும் கதாநாயகனாக வந்திருந்தவர். தனது சுறுசுறுப்பான நடிப்பால் கவர்ந்திழுத்தவர். இப்படி இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

தயாரிப்பாளர், நடிகர் அசோகன்  நூற்றுக்கும் மேலான படங்களில் நடித்தவர். குணச்சித்திர வேடங்களில் நடித்ததை விட இவர் வில்லனாக நடித்ததே அதிகம். திரையில் இவர் வந்தாலே இவரை கண்டு பயந்தும், இவரை வசைபாடும் விதமாகத்தான் தமிழ் சினிமாவில் பெயர் வாங்கியிருந்தார் இவர்.

“கங்கா”, “ஜக்கம்மா”, ஜம்பு”, “துணிவே துணை” உள்ளிட்ட பல படங்களில் அசோகனும், ஜெய்சங்கரும் இணைந்து நடித்திருப்பர் அதிகமாக படங்களில் தொடர்ந்து நடித்து வந்ததால் நிஜவாழ்வில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறினர்.

jamboo

jamboo

அசோகன் யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென மறைந்துவிட்டார். 50 வயதை மட்டுமே கடந்திருந்த நிலையில் நடந்த அசோகனின் மரணம் திரை உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கிறிஸ்தவ முறைப்படி அவரது இறுதி சடங்குகள் நடத்தப்படுவதற்காக அவரின் பூத உடல் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்தது. திரை உலகத்தை சார்ந்த பிரபலங்கள் பலரும் அசோகனின் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.

தலையில் அதிகமான முடியும், முகத்தில் தாடியுடனும் படுக்க வைக்கப்பட்டிருந்த அசோகனின் உடலை பார்த்து அழுது கொண்டே இருந்தாராம் ஜெய்சங்கர். திடீரென முடிதிருத்தும் நபர் ஒருவரை அழைத்து வரச்சொல்லி,  தனது  நண்பன் அழகன், இறந்த போதிலும் அவர் அழகாகத்தான் இருக்க வேண்டும் எனச்சொல்லி அசோகனின் முகத்தை அழகு படுத்தினாராம்.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் நண்பர் மீது ஜெய்சங்கர் கொண்டிருந்த பாசத்தையும், அவர்களின் நட்பின் ஆழத்தையும் பார்த்து அவர்களது நட்பை பற்றி புகழ்ந்து பேசினார்களாம்.

More in Tamil Flash News

To Top