cinema news
முதன் முறையாக வருத்தம் தெரிவித்த ஜெய்பீம் இயக்குனர்
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் அக்னிசட்டி கலசத்தை காலண்டரில் குறியீடாக வைத்திருந்தனர். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. உடனே அக்னி கலச காலண்டரை மறைத்து லட்சுமி காலண்டராக வைத்தனர். இதன் பின்னும் அப்படி குறிப்பிட்டு காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன என பாமக தலைவர் அன்புமணி கேட்ட கேள்விக்கு சரியான பதில் சூர்யா தரப்பில் அளிக்கப்படாததால் வன்னியர்கள் சங்கம் அனைவரும் ஓரணியில் இணைந்து இப்படத்தை எதிர்த்தனர்.
இந்த நிலையில் இப்பட விவகாரம் மிகவும் சீரியசாக போவதை உணர்ந்த பட இயக்குனர் முதன் முறையாக வருத்தம் தெரிவித்துள்ளார். நடந்த தவறு அனைத்துக்கும் நான் தான் காரணம். அப்படி ஒரு காலண்டர் படம் குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்தும் என நான் அறியவில்லை. என் நோக்கமும் அப்படி ஒரு சமூகத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கமில்லை என பட இயக்குனர் ஞானவேல் கூறியுள்ளார்.