- Homepage
- Entertainment
- பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் மீது தொடர் சர்ச்சை- பாலியல் புகார் அளித்த கரூர் நடன ஆசிரியை
பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் மீது தொடர் சர்ச்சை- பாலியல் புகார் அளித்த கரூர் நடன ஆசிரியை
பிரபல பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன். இவர் இஸ்லாமியராக இருந்தாலும் ஹிந்து பெற்றோரிடம் வளர்ந்ததால் பரதநாட்டிய கலையை கற்றுக்கொண்டு ஹிந்து தெய்வங்களை நம்பிக்கையுடன் வழிபட்டு வந்ததாகவும் இவர் பல பேட்டிகளில் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் சில நாட்கள் முன் ஸ்ரீரங்கம் கோவிலில் இவரை உள்ளே விடவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில் பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் ஜாகிர் உசேனை 17 மாவட்ட இசைப்பள்ளி கலையியல் அறிஞராக நியமித்தார்.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்திற்கு ஆய்வுக்கு சென்ற இவர் அங்குள்ள ஒரு பரதநாட்டிய ஆசிரியையிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதே போல் சிவகங்கை மாவட்டத்திலும் பெண் ஆசிரியையிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா முன்னணி தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.