Latest News
குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிகளில் சிறுத்தை சுற்றித்திரிவதால் அப்பகுதிகளில் இருக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதிகளில், யானை, புலி, சிறுத்தை நடமாட்டங்கள் அதிகம். இவை அங்கு பலரால் வளர்க்கப்படும் நாய், ஆடு, மாடுகள் உள்ளிட்ட ஜீவன்களை கடித்து கொன்று விடுகின்றன.
சமீபத்தில்தான் ஆட்கொல்லி புலியை மிகுந்த போராட்டத்துக்கு பின் வனத்துறையினர் பிடித்தனர். இந்த நிலையில் பந்தலூர் இந்திரா நகரில் சிறுத்தை ஒன்று சுற்றித்திரியும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
