தமிழக மக்களுக்கு எச்சரிக்கை – 14 மாவட்டங்களில் கனமழை

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை – 14 மாவட்டங்களில் கனமழை

தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் இன்று மழைபெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தற்போது கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி, நீலகிரி, திண்டுக்கல், கோவை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. அதேபோல், தென்மேற்கு வங்கக்கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படும். மணிக்கு ரூ. 45 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.