இன்று விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட 8 மாவட்டங்களில் கனமழை பொழியும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் புவியரசன் ‘வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறினார்.
அதேபோல், அரியலூர், நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.