Entertainment
இன்று இஸ்லாமியர்களின் ரம்ஜான் திருநாள் கொண்டாடப்படுகிறது
ஹிந்துக்களுக்கு தீபாவளி, கிறித்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் மிக முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அது போல இஸ்லாமியர்களுக்கு முக்கிய பண்டிகையாக ரமலான் கொண்டாடப்படுகிறது.
30 நாட்கள் அனைத்தையும் மறந்து நோன்பு நோற்று 30 நாள் முடிவில் பிறை தெரியும்போது நோன்பு முடித்து ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்களின் மிக உற்சாகமான பண்டிகையான இந்த பண்டிகை, கடந்த இரண்டு வருடங்களாக பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை, காரணம் என்னவென்றால் இரண்டு வருடங்களாக கடுமையான கொரோனா சூழல்தான். இந்த கொரோனா சூழலால் கடுமையான பதட்டமும் குழப்ப நிலையும்தான் கடந்த இரண்டு வருடங்களில் இந்த ரம்ஜான் காலக்கட்டத்தில் இருந்து வந்தது.
இந்த வருடம்தான் லாக் டவுன் போன்ற எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. இதனால் இஸ்லாமியர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்து மிக உற்சாகமாக இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
