இஸ்லாமிய கூட்டமைப்புக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்

இஸ்லாமிய கூட்டமைப்புக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய பாரதிய ஜனதா செய்தி  தொடர்பாளர் நுபுர் சர்மா என்பவர், முகமது நபி அவர்களை அவதூறாக பேசி விட்டதாக இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இன்று வளைகுடா நாடுகள் அனைத்தும் இந்த சம்பவத்திற்கு ஒன்று திரண்டு கண்டனம் தெரிவித்தன.இந்தியாவும் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர் சொன்னது இந்தியாவின் கருத்து இல்லை தனிப்பட்ட நபரின் கருத்துதான் எனவும் இந்தியா சொன்னது.

இருப்பினும் இதை விடாமல் பிடித்துக்கொண்ட உலக இஸ்லாமிய  கூட்டமைப்பு தொடர்ந்து இதை பிரச்சினையாக்குவதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்பும், இஸ்லாமிய ஒத்துழைப்பு  கூட்டமைப்பு தவறாக வழி நடத்தும் நோக்கில் கருத்துக்களை வெளியிட்டுள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.