சுந்தர் சி, சாய் தன்ஷிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இருட்டு திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
முகவரி, தொட்டி ஜெயா, 6 மெழுகுவர்த்திகள், நேபாளி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வி.இசட். துரை. தற்போது ‘இருட்டு’என்கிற திகில் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சாய் தன்ஷிகா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.