Connect with us

திருப்பூர் இளைஞரின் வெறித்தனம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Corona (Covid-19)

திருப்பூர் இளைஞரின் வெறித்தனம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

திருப்பூரில் போலிஸாருக்குத் தன் முகம் தெரியாமல் இருப்பதற்காக இளைஞர் ஒருவர் செய்த செயல் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதை மதிக்காமல் வெளியே உலவுவது அதிகமாகியுள்ளது. அதுபோன்ற மக்கள் நடமாட்டத்தைக் கவனிக்க போலிஸார் ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் போலிஸார் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ட்ரோன் கேமரா பறக்க ஒரு மரத்தின் அடியில் கும்பலாக கேரம் போர்டு விளையாடும் கும்பல் தெறித்து ஓட ஒரு இளைஞர் மட்டும் கேரம்போர்டைத் தூக்கி தலையில் வைத்து ஓடுகிறார். ஒரு கட்டத்தில் தனது லுங்கி அவிழ்ந்து விழ அதைக் கூட பொருட்படுத்தாமல் ஓட கேமரா அவரை நெருங்கியதும் கேரம் போர்டை வைத்து முகத்தை மறைத்துக்கொள்கிறார்.

கேமரா மற்றொரு பக்கத்துக்கு திரும்ப அப்போதும் கேரம்போர்டை வைத்து முகத்தை மறைக்க பார்ப்பவர்களுக்கு சிரிப்பை வரவழக்கிறது அந்த வீடியோ. ஒரு கட்டத்தில் ட்ரோன் மேலே செல்ல கேரம் போர்டையும் தூக்கிப் போட்டு வேகமாக ஓடுகிறார் அந்த இளைஞர். இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் இப்போது வைரல் ஆகியுள்ளது.

More in Corona (Covid-19)

To Top