இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தை இரண்டு வருடங்கள் முன் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி இருந்தார். குறிப்பாக இந்த படத்தை இயக்குனர் பாரதிராஜா கூட கடுமையாக எதிர்த்தார்.
இரட்டை அர்த்த வசனங்கள் என்று சொல்வதை விட நேரடியாகவே ஆபாசமாக வசனங்கள் வைக்கப்பட்டன.
இப்போது அதையும் மிஞ்சும் வகையில் இரண்டாம் குத்து என்ற படத்தை இயக்கியுள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.
இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. பார்க்க படு வக்கிரமாக ஆபாசமாக இப்படத்தின் டீசர் இருந்ததால் பலரும் இந்த டீசருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்த பாரதிராஜா இந்த டீசருக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படுக்கையறை காட்சிகள் அதிகம் உள்ளதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் டீசரை வெளியிட்ட ஆர்யாவுக்கும் கடும் கண்டனம் குவிந்து வருகிறது.