இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தை இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் கடுமையாக கண்டித்திருந்தனர். காரணம் என்னவென்றால் டபுள் மீனிங் டயலாக் ஆக கூட இல்லாமல் ஓப்பனாகவே ஆபாச வசனங்கள் பேசப்பட்டிருந்தது.
தற்போது இரண்டாம் குத்து என்ற படத்தை எடுத்து சமீபத்தில் இப்படத்தின் டீசர் , பர்ஸ்ட் லுக் முதலியவற்றை வெளியிட்டிருந்தார். படு ஆபாசமாக டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் இருந்தது இதை எதிர்த்து இயக்குனர் பாரதிராஜா மீண்டும் குரல் கொடுத்திருந்தார்.
இதையடுத்து இயக்குனர் பாரதிராஜாவுக்கும் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமாருக்கும் வார்த்தைப்போர் வெடித்தது.
இந்நிலையில் தீபாவளிக்கு பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில் இரண்டாம் குத்து ரிலீஸ் ஆக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் டீசரை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் டீசரை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூ டியூப் மற்றும் சமூக வலைதளங்கள் எதிலும் டீசர் இருக்க கூடாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எவ்வித நாகரீகமும் இப்படத்தில் இல்லை என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.