---Advertisement---

கொரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்க புதிய கருவி ! ஈரான் சாதனை!

By Vino
Published on: April 17, 2020
---Advertisement---

100 மீட்டர் தூரத்தில் இருக்கும் கொரோனா நோயாளியைக் கண்டுபிடிக்கும் வகையில் ஈரான் புதிய கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.

கொரோனா நோயாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக பலக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வரப்படுகின்ரன. அவை அனைத்தும் நோயாளியின் உடல் திரவ, ரத்த மாதிரிகளை பயன்படுத்தி செய்யப்படுபவை. இந்நிலையில் ஈரான் ஒரு புதிய கருவியைக் கண்டுபிடித்துள்ளது. ஈரானின் புரட்சிகர படைப்பிரிவு கண்டுபிடித்துள்ள இந்த கருவியின் மூலம் 100 மீட்டர் தொலைவுக்குள் கொரோனா பாதிக்கப்பட்டவர் இருந்தால் கண்டுபிடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கருவியின் அண்டெனா காட்டும் திசையில் 100 மீட்டருக்குள் வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதி இருந்தால் அதனையும் கண்டறியும் வகையில் இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பரிசோதனியின் மூலம் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியால் சோதனையின் போது மருத்துவருக்கு நோய் தொற்றும் வாய்ப்புக் குறையும் எனத் தெரிகிறது.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now