Latest News
திருவண்ணாமலை கலெக்டருக்கு தலைமை செயலாளர் வாழ்த்து
திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிய கலெக்டராக சில மாதங்களாக பதவி வகித்து வருபவர் முருகேஷ். இவர் திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சிக்காக 100 நாள் வேலை செய்பவர்களை 1000க்கும் மேற்பட்ட குளங்களை செப்பனிட்டும் , புதிதாக 1121குளங்களையும் வெட்ட வைத்துள்ளார்.
வெறும் 30 நாட்களில் இந்த சாதனையை செய்ததற்காக தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட கலெக்டர் முருகேஷை பாராட்டியுள்ளார்.
அவர் கூறி இருப்பதாவது.
30 நாட்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 1121 குளங்கள் வெட்டியது உலக சாதனை என்று தலைமை செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷை பாராட்டி தலைமை செயலாளர் வாழ்த்து கடிதமும் அனுப்பியுள்ளார்.