பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த 20வது IPL போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது.இதில் டாஸ் வென்ற கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய கோலி 41, பார்த்திவ் படேல் 9, மோயின் அலி 32, ஸ்டாய்னிஸ் 15, டி.வில்லியர்ஸ் 17 ரன்கள் எடுத்தனர்.இதனால், 20 ஓவர்கள் முடிவில் 149/8 ரன்கள் எடுத்திருந்தது.
எளிய இலக்கை எட்டிய டெல்லி அணியின் ஷ்ரேயஸ் 67, ப்ரித்வி ஷா 28, இன்கிராம் 22, ரிஷப் பண்ட் 18 என ரன்கள் எடுக்க 18.5 ஓவர்களில் 152/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதனால், டெல்லி அணி தனது 3வது வெற்றியை பதிவு செய்தது. அதே சமயம், இது பெங்களூர் அணியின் 6வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.