ஆபாச பேட்டி எடுத்தவர்கள் கைது

80

சமீபத்தில் 2021 புத்தாண்டையொட்டி ஜாலிக்காக ஒரு பேட்டி எடுக்கப்பட்டது. சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்த பேட்டி சர்ச்சையானது சமூக வலைதளங்களில் உலா வந்த பேட்டியில் பேசிய ஒரு பெண் படு கேவலமாக பெண்களே பேசத்தயங்கும் பல வார்த்தைகளை பேசி இருந்தார்.

எனக்கு மூணு ஆண், இருந்தாலும் பத்தாது என ஆபாசமாக பேசி அந்த பெண் பேசி இருந்த நிலையில் இது குறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூடியூப் சேனலின் (Chennai Talk YouTube channel) தொகுப்பாளர் 23 வயதுடைய அசென் பாட்ஷா, கேமராமேன் 24 வயதுடைய அஜய் பாபு மற்றும் சேனல் உரிமையாளர் தினேஷ் குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பாருங்க:  காஷ்மீரில் 3 பாஜகவினர் சுட்டுக்கொலை
Previous articleசத்தமே இல்லாமல் கலக்க இருக்கும் புலிக்குத்தி பாண்டி
Next articleமாஸ்டர் படம் லீக் ஆனது எப்படி