Latest News
இந்திர தனுஷ் தடுப்பூசி இன்று துவக்கம்
இந்திர தனுஷ் தடுப்பூசி என்றால் பலருக்கு என்னவென்று தெரியாமல் குழப்பமாக இருக்கும்.
இந்திர தனுஷ் தடுப்பூசி என்றால் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி மூலம் தவிர்க்கக் கூடிய நோய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டமாகும்.
இந்த திட்டத்தை அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா துவக்கி வைத்தார்.
தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, போலியோ, தட்டம்மை, மஞ்சள்காமாலை, நிமோனியா காய்ச்சல், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு இத்திட்டத்தின் கீழ் தடுப்பூசி வழங்கப்படுகிறது.
நேற்று நான்காம் கட்ட இந்திர தனுஷ் தடுப்பூசி திட்டத்தை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா துவங்கி வைத்தார்.
90 சதவீதம் பேரை இத்திட்டம் சென்றடைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். மத்திய அரசும் மாநிலங்களும் இதற்கான கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டும். குழந்தைகள் மற்றும் கர்ப் பிணிகளை பல்வேறு நோய்களில் இருந்து தடுப்பூசிகள் காக்கின்றன எனவும் மன்சுக் மாண்ட்வியா கூறியுள்ளார்.
