முன்னாள் பாரத பிரதமர் நேருவின் மகள் இந்திரா காந்தி. இவர் பிரதமராக இந்தியாவில் இருந்த காலத்தில்தான் எமர்ஜென்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படி சட்டென முடிவை எடுப்பதிலும் மிக நேர்மறையாக முடிவுகளை டக்கென்று எடுப்பதில் இந்திரா வல்லவர். கொண்ட கொள்கையில் உறுதியும் உள்ளவர். கடந்த 1984ல் இவர் பாதுகாவலர்களாலேயே சுடப்பட்டு இறந்தார்.
இவரது மகன், ராஜீவ்காந்தி முன்னாள் பிரதமராக இருந்தவர். இவரது மகள்தான் பிரியங்கா காந்தி. இவரும் ஒரு அரசியல்வாதிதான். சமீபத்தில் உ.பி ஹாத்ராஸ் சம்பவம் தொடர்பாக போலிசுடன் வாக்குவாதம் செய்கிறார். அப்படி ஃபோல்டாக அவர் வாக்குவாதம் செய்வதை எண்பதுகளில் ஒரு கூட்டத்தில் இந்திராவும் அதே போல வாக்குவாதம் செய்கிறார்.
இரண்டு பேரும் ஆக்சனில் ஒன்று போல இருப்பதாகவும் சாயலிலும் ஹேர் ஸ்டைலிலும் அனைத்திலும் ஒரே போல இருப்பதாக நெட்டிசன்கள் டுவிட்டரில் கருத்து தெரிவிக்கின்றனர்.