இந்தியாவில் நாளுக்கு நாள் கொரொனா நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு இந்திய அளவில் 144 தடை அமலில் உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு ”ஆரோக்கிய சேது” என்ற பெயரில் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த செயலியின் மூலம் போனில் உள்ள இருப்பிடம் காட்டும் வசதி மற்றும் ப்ளூடூத் ஐ இயக்கிவிட்டு அந்த செயலியை திறந்தால் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் அருகில் இருந்தால் பயனாளர்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.
மத்திய அரசின் ஆரோக்கிய செய்து செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நான்கு நாட்களில் இதுவரை 59 லட்சத்திற்கும் மேலானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த 2ஆம் தேதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்தில் அறிமுகப்படுத்த இந்த செயலியை இதுவரை 5 மில்லியனுக்கு மேற்பட்டோர் ஆண்ட்ராய்டு தளத்தில் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.