Connect with us

பணமெடுக்க மக்கள் கூடுவதை தவிர்க்க புதிய விதிகளை அறிமுகப்படுத்திய இந்திய வங்கிகள் சங்கம்

Indian Bank Association new annoucement

Business

பணமெடுக்க மக்கள் கூடுவதை தவிர்க்க புதிய விதிகளை அறிமுகப்படுத்திய இந்திய வங்கிகள் சங்கம்

கொரொனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகின்றது. கொரொனா பரவாமல் தடுக்க இந்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை பிறப்பித்து உள்ளது. இதனை அடுத்து மக்களின் அத்தியாவாசிய, மற்றும் பொருளாதார சிக்கல்களை புரிந்துக் கொண்டு ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளை அமல்படுத்தபட்டுள்ளது.

தற்போது, ஊரடங்கில் பெரும்பாலன்னோர் வங்கிகளில் பணம் எடுப்பதில் சவாலான சூழ்நிலையில் தவித்து வருகின்றனர். இந்த பிரச்சனையை சமாளிக்க இந்திய வங்கிகள் சங்கம் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மாத தொடக்கத்தில் வங்கிகளில் அதிக கூட்டம் கூடுவதால் சமூக இடைவெளியை வாடிக்கையாளர்கள் முறையாக கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலையால், வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி வங்கிகளில் பணம் எடுக்க வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தேதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு எண்ணின் கடைசி இலக்கு எண்களுக்கு ஏற்றாற் போல் வாடிக்கையாளர்களுக்கு தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. உங்களின் கடைசி எண்களை சரிபார்த்து கொண்டு கீழ்ழே வரும் தேதிகளில் வங்கிகளில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

கடைசி இலக்கு: 0 மற்றும் 1 உடையவர்கள்: மே 4-ம் தேதியும்
2 மற்றும் 3 உடையவர்கள்: மே 5-ம் தேதியும்
4 மற்றும் 5 உடையவர்கள்: மே 6-ம் தேதியும்
6 மற்றும் 7 உடையவர்கள்: மே 8-ம் தேதியும்
8 மற்றும் 9 உடையவர்கள்: மே 11-ம் தேதியும் பணத்தை எடுக்கலாம்.

முக்கிய குறிப்பு: இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் மே 11-ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

பாருங்க:  வைரலாகும் ஏகே அஜித் புகைப்படம் பாராட்டிய கஸ்தூரி

More in Business

To Top