Published
11 months agoon
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த கொரோனா காலங்களில் கடுமையான கொரோனா தொற்று ஏற்பட்டது.
அதிலிருந்து கடுமையாக போராடிதான் மீண்டார் இவர். இந்த நிலையில் இந்தியா வந்துள்ள இவர் இந்திய தடுப்பூசிதான் எனக்கு நல்ல பலனை தந்தது என கூறியுள்ளார்.
இது குறித்து பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் எஸ்.ஆர் சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது.
இந்த தடுப்பூசியை வைத்து நம் நாட்டில் கொஞ்ச நஞ்சமா அரசியல் செய்தார்கள்? உலக தலைவர்கள் பாராட்டுகிறார்கள், உள்ளூர் தலைவர்கள் பாரட்ட வேண்டாம், ஆனால் மக்களை தடுப்பூசிக்கு எதிராக திசைத்திருப்பாமல் இருந்திருக்கலாம். ஆண்டவன் அருளால் இந்த நயவஞ்சக அரசியல் தோற்கடிக்கப்பட்டது சற்று ஆறுதல் என எஸ்.ஆர் சேகர் கூறியுள்ளார்.