இந்தியாவில் கொரொனா தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மக்களிடம் சமூக இடைவெளி, தனிமைப்படுத்தல், வீட்டிலேயே இருக்குமாறு பல்வேறு கட்டுப்பாடுகளை முன்மொழிந்து வருகின்றது.
இந்த வகையில், கொரொனாவை விரைவாக கண்டுபிடிக்க ரேபிட் பெஸ்ட் கிட்டுகள் இந்தியாவிற்கு வரவழைக்கப்படுகின்றது. இந்த ரேபிட் பெஸ்ட் கிட்டுகள் மூலம் பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள முடியும், அதாவது சுமார் 30 நிமிடங்களுக்குள் கொரொனாவை கண்டறிய இந்த கிட்டுகள் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு சீனாவிலிருந்து இன்று மாலை 6.50 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வரஉள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தியாவுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் வந்தபிறகு மாநிலங்களுக்கு கொரொனா நோய்த்தொற்று விகிதத்தைப் பொறுத்து பிரித்து தரப்படும் என்று கூறப்படுகின்றது.