தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்தியா! காரணம் இதுதான்!

2007

இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் தனது முதல் இடத்தை இழந்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய அணி டெஸ்ட் தொடரில் நம்பர் 1 அணியாக இருந்து வருகிறது. சமீபத்தில் நியுசிலாந்துக்கு சென்று 0-3 என்ற கணக்கில் வொயிட்வாஷ் ஆனது. ஆனாலும் ஐசிசிக்கான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இன்னமும் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை 116 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலியா பிடித்துள்ளது. அடுத்த நிலையில் நியூசிலாந்தும் (115 புள்ளிகள்), 114 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையே இந்தியா பிடித்துள்ளது.

அண்மைய தரவரிசை பட்டியல் மதிப்பீட்டில், 2019 மே மாதத்துக்கு பிறகு நடந்த போட்டிகளுக்கு 100 சதவீதமும், அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் நடந்த போட்டிகளுக்கு 50 சதவீதமும் மதிப்பீடு செய்ய கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதுதான் இந்திய அணி முதல் இடத்தை இழக்கக் காரணம் என சொல்லப்படுகிறது.

பாருங்க:  தோனியைக் கலாய்க்கும் நெட்டிசன்கள் – காரணம் கொரோனாதான்!