Latest News
இந்தியாவுக்கு ஆஸ்திரேலியாவின் சப்போர்ட்
கொரோனாவுக்கு எதிராக இந்தியா கடுமையாக போராடி வருகிறது. கொரோனா தொற்றுக்கு பல ஆயிரம் பேர் தினம் தோறும் இந்தியாவில் மடிந்து வருவதும், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு திணறி வருவதும் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகி விட்டது.
எல்லா கட்டுப்பாடுகளையும் தடைகளையும் தாண்டி கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.
மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பது மட்டுமே இதற்கு மருந்தாக உள்ளது. இந்த நிலையில் இந்தியா உறுதியாக இருங்கள் என்ற வாசகத்துடன் ஆஸ்திரேலியாவில் உள்ள சவுத் வேல்ஸ் பல்கழைக்கழகத்தில் இந்தியா மூவர்ணகொடியுடன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த பெருந்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வாருங்கள் என ஒளிரும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
