தமிழகத்தில் வழிப்பாட்டுத்தலங்கள் திறக்க முடிவு! தமிழக அரசு அனுமதி!!

1422
temples to be open from 1st JUne
temples to be open from 1st JUne

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதனையடுத்து தமிழகத்தில் வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்கள், போக்குவரத்து, என படிபடியாக தளர்வுகள் தொடங்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அனைத்து மத வழிப்பாட்டுத்தலங்களையும் திறக்ககோரி ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டு, அதற்கு தமிழக அரசும் வழிப்பாட்டுத்தலங்களை திறந்தால் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் பெரும் சட்டஒழுங்க பிர்ச்சனை சந்திக்க நேரிடும் என்றும், தற்போதைக்கு கோயில்கள் திறக்கப்பட மாட்டாது என்றும் பதிலளித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் வழிப்பாட்டுத்தலங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 40,000 கோயில்கள் உள்பட அனைத்து மத வழிப்பாட்டுத்தலங்களும் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதி என்று தமிழக அரசு முடிவு செய்யதுள்ளது. ஆனால் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் பக்தர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கவும், முகக்கவசம் அணிவதும் கட்டாயம் உள்ளிட்ட பாதுக்காப்பு நிபந்தனைகளும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  நாளை திறக்கிறது டாஸ்மாக் கடைகள்! கொஞ்சம் இதைப் படித்துவிட்டு செல்லுங்கள்!