தமிழகத்தில் 5ம் கட்ட ஊரடங்கை அறிவித்த தமிழக அரசு!

1089
lockdown 5.0 in Tamilnadu
lockdown 5.0 in Tamilnadu

கொரொனா நோய் தொற்றலால் உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து, இந்தியாவில் கொரொனா தொற்று பரவாமல் தடுக்க கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி இன்று வரை 4 கட்டமாக ஊரடங்கு அமல்படுத்திப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால் இன்றுடன் 4வது கட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில், தமிழக அரசு 5ம் கட்ட ஊரடங்கை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி 5ம் கட்ட ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1 முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயங்கும் – அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க அனுமதி என்றும் மேலும், வழிபாட்டு தலங்களுக்கான தடை தொடரும் – அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

பாருங்க:  விருது கொடுத்த சாக்‌ஷி... தூக்கி எறிந்த லாஸ்லியா... பிக்பாஸ் வீடியோ