Corona (Covid-19)
தமிழகத்தில் கொரொனா பாதித்தவரின் எண்ணிக்கை 19,000 நெருங்கியது!
உலகம் முழுவதும் கொரொனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற ஆராய்ச்சியாளர்கள் மருந்துகள், தடுப்பூசிகள், கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் கொரொனாவின் தாக்கம் அதிதீவிரம் அடைந்து, சுமார் 1.58 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து, தமிழகத்தில் கொரொனா பாதித்தவரின் எண்ணிக்கை 19,000 நெருங்கியது.
தமிழகத்தில், மேலும் 827 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் மட்டும் 559 பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல். மகாராஷ்டிராவில் இருந்து வந்த 74 பேருக்கும், கர்நாடகாவில் இருந்து வந்த 20 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்ததுள்ளது.