இந்தியாவில் கொரொனா பாதித்தவரின் எண்ணிக்கை சுமார் 1.31 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் மட்டும் சுமார் 17ஆயிரத்தை தொட்டுள்ளது. இதில் முக்கியமாக கொரொனா பாதிப்பில் தொடர்ந்து சென்னை முதலிடத்தில் உள்ளது. இதனால் கொரொனா பாதிப்பில் தொடர்ந்து சென்னை மாவட்டம் வெளுத்து வாங்கியுள்ளது.
இந்நிலையில், இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று மேலும் 805 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் சென்னையில் மட்டும் 549 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆக சென்னையில் மொத்தமாக பாதித்தவரின் எண்ணிக்கை 11,131 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 407 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8324லிருந்து 8731 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.