இம்சை அரசன் வந்து 15 வருசம் ஆச்சாம்- இயக்குனர் நெகிழ்ச்சி

18

வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ம்புலிகேசி திரைப்படம் கடந்த 2006ம் ஆண்டு வெளியானது. முதன் முதலாக வடிவேலுவை நாயகனாக்கிய படம் . அது மட்டுமல்லாமல் இது போல கதைக்களம் தமிழுக்கு புதுசு.

அந்தக்காலங்களில் கல்கியிலும் குமுதத்திலும் நாம் படித்த மன்னர் கால ஜோக்ஸ் எல்லாம் படித்து விட்டு சிரித்துவிட்டு கணப்பொழுதில் மறந்துவிடுவோம். ஆனால் இப்படத்தில் அது போல ஜோக்குகளை காட்சிப்படுத்தி இருந்தது சிறப்பாக இருந்தது.

சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் படத்தின் பட்டி டிங்கரிங் தான் இந்த படம் என்றாலும் படத்தின் திரைக்கதை புதுசு.

அருமையாக இயக்கி இருந்தார் இயக்குனர் சிம்பு தேவன். இப்படம் வந்து இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைவதை இயக்குனர் சிம்புதேவன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  விஜய் சேதுபதி தயாரிப்பில் இடைவேளை பட டீசர்
Previous articleதமிழக பிஜேபி யங் லீடர் அண்ணாமலை- பாஜகவினர் வரவேற்பு
Next articleகேரளாவில் மட்டும் அதிகரிக்கும் கொரொனா