இந்திய மக்களுக்கு துணை நிற்போம்- பாக் பிரதமர் இம்ரான்கான்

26

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. வட இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா இரண்டாவது அலையால் வட நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் எதிரி நாடு என கருதப்படும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இது குறித்து கூறி இருப்பதாவது.

கொரோனா அலையின் அபாயகரமான பாதிப்புக்கு எதிரான போரில் இந்திய மக்களுடன் துணையாக இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் இதர உலக நாடுகளை சேர்ந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். உலக அளவிலான இந்த சவாலை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும்” என்று இம்ரான் கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பாருங்க:  பார்கவ் ஆகவே மாறிப்போன சாந்தனு
Previous articleநடிகை சரிதா நாயர் மீண்டும் கைது
Next articleலாபம் பட பாடல் சாதனை