Tamil Flash News
அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி – பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!
தமிழ அரசின் 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் ஓ.பி.எஸ் பல முக்கிய அம்சங்களை அறிவித்தார்.மேலும், அரசு ஊழியர்களுக்கும் பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.
அனைத்து துறை, அரசு ஊழியர் ஊதியத்திற்காக ரூ.2,63,823.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஊதியம், ஓய்வூதியம், பிற ஓய்வூதியக்கால பலன்களுக்காக ரூ.55,399.75 கோடியும், ரூ.29,27.11 கோடியும் ஒதுக்கீடு செய்திருப்பதாக அவர் அறிவித்தார்.
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஸ்ரீதர் குழு அறிக்கை பரிசீலனை செய்யப்படும் எனக்கூறிய ஓ.பி.எஸ் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய சித்திக் குழு தந்த அறிக்கையும் பரிசீலனையில் உள்ளதாகவும் அறிவித்தார்.