தமிழில் வந்த சில சீரியல்கள் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இமான். முக்கியமாக கிருஷ்ணதாசி என்ற சீரியலில் இவரது இசை வெகுவாக பேசப்பட்டது.
அதனால் சீக்கிரமே இசையமைப்பாளரும் ஆனார். 19 வயதில் இருந்தே இவர் இசையமைத்து வருகிறார். விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் ஒரு இசையமைப்பாளராக இவர் அறியப்பட்டார்.
இந்த நிலையில் இமான், மோனிகா என்பவரை கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்தார். இந்நிலையில் மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் கடந்த 2020லேயே மோனிகாவை விவாகரத்து செய்தாலும் அதை சில மாதங்களுக்கு முன் தான் அறிவித்தார்.
இந்த நிலையில் தமிழ் சினிமாக்களில் நீண்ட காலம் டிசைனராக பணியாற்றிய உபால்டு என்பவரின் மகள் அமலியை இன்று இரண்டாவது திருமணம் செய்தார் இமான். இமானை சின்னத்திரையில் அறிமுகப்படுத்தியது பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான குட்டி பத்மினிதான் அவர் உட்பட பலர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.