Published
2 years agoon
தமிழில் இளையராஜாவின் இசை பற்றி எல்லோருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இசைக்கடவுள் என்றே பெரும்பாலான இசை ரசிகர்கள் இளையராஜாவை குறிப்பிடுவதுண்டு.
தமிழில் எத்தனையோ பாடல்களை இனிமையாக கொடுத்துள்ளார். அது போல தெலுங்கிலும் இளையராஜா எத்தனையோ பாடல்களை செம ஹிட் ஆக்கியுள்ளார். பாடல்களை மட்டுமல்ல படத்தையும் தான். இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி.
80களில் வந்த பல படங்களில் தெலுங்கில் இவர்களது வெற்றிக்கூட்டணியில் வந்த படங்களில் எல்லாம் பாடல்கள் சூப்பராக அமைந்தன.
அப்படியாக வம்சி இளையராஜா கூட்டணியில் 1987ல் வந்த படம்தான் மஹரிஷி.
இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் மஹரிஷிராகவா, ஜோடியாக நிஷாந்தி நடித்திருந்தார்.
இப்படத்தில் இளையராஜாவின் இசை பெரிய அளவில் ஹிட் ஆகியது.
சுமம் ப்ரதி சுமம், தமிழில் மஞ்சப்பொடி தேய்க்கையிலே என வந்த பாடல் மாட்டாராணி மெளனமிடி என்ற பாடலாக வந்தது.
இசைஞானி இசையமைத்த தெலுங்கு படங்களில் பெரிய வரவேற்பை கொடுத்த படம் இதுவாகத்தான் இருக்கும்.
இப்படத்தில் பின்னணி இசையும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.