Entertainment
ரசிகர்களுக்கு இளையராஜா பாடல் எழுத வாய்ப்பு
இசைஞானி இளையராஜா தனது ரசிகர்களுக்காக பாடல் எழுத ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதன்படி அவர் டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் மெட்டுக்கு ரசிகர்கள் தங்கள் சொந்த நடையில் பாடல்களை எழுதி அனுப்பலாம் என கூறியுள்ளார்.
அந்த மெட்டு கீழே உள்ளது. அந்த மெட்டுக்கு தகுந்தவாறு பாட்டு எழுதி அனுப்புமாறு சிறந்த பாடல் வரிகள் தேர்ந்தெடுக்கப்படும் என கூறி உள்ளார்.
சிலர் தமிழ் பாடல்களை எழுதி அனுப்பியுள்ள நிலையில் தமிழ் பாடல் வரிகள் ரசிகர்களிடம் இருந்து வரப்பெற்று இருப்பதாக கூறியுள்ள இளையராஜா, பிறமொழி ரசிகர்களும் தன்னுடைய மெட்டுக்கு பாடல் வரிகளை எழுதி அனுப்பலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
