இன்று இசைஞானி இளையராஜா பிறந்த நாள்

19

நல்ல மகிழ்ச்சியான மனநிலைக்கும், தாங்க முடியாத துயரங்களுக்கும் தற்போது இருக்கும் லாக் டவுன் லைஃப்க்கும் இளையராஜாவின் பாடல்களே துணை. தென்மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து இசைத்துறையில் பல மகத்தான சாதனைகள் படைத்தது மட்டுமல்லாமல் இசை என்றால் இவர்தான் என்னும் அளவுக்கு பல அற்புத மெட்டுக்களை படைத்து இந்த யுகம் மறைந்து இன்னொரு யுகம் வந்தாலும் இளையராஜாவின் பாடல்கள் அப்போதும் ஒலிக்கும் அளவுக்கு தரமாக நிரந்தரமாக பலரின் மனதில் குடியேறிவிட்டது அவரது பாடல்.

80கள் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றால் அந்த பொற்காலத்திற்கு தங்க முலாம் பூசியவர் இளையராஜா. இவரின் பாடல்கள் இல்லை என்றால் ஸ்வீட் 80ஸ் இல்லை எனலாம்.

எல்லாரின் கடந்து போன காலங்களை எல்லாம் நினைவுபடுத்துபவர் இளையராஜா. சோகமான பல உள்ளங்களுக்கு சுகமான மருந்துதான் இசைஞானி இளையராஜா.

காலத்தால் அழியாத அவரது பாடல்கள்தான் அனைவருக்குமான மருந்து.

பாருங்க:  இசைஞானியின் ஸ்டுடியோவுக்கு விசிட் அடித்த ரஜினிகாந்த்
Previous article2 டிஜி கொரோனா மருந்து எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்
Next articleபடத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா