வீட்டிலேயே உட்கார்ந்து பாடல் கம்போஸ் செய்யும் இளையராஜா

26

80, 90களில் மிக பிஸியாக இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. இவர் பாடல் கம்போஸ் செய்யும் இடம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில்தான். இன்று நாம் கேட்டுக்கொண்டிருக்கும் பல இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் இங்கிருந்து உருவான பாடல்கள்தான்.

சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் 40 ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பிரசாத் ஸ்டுடியோவை காலி செய்ய வேண்டிய நிலை . இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு உள்ள நிலையில், தற்போது இசைஞானி இளையராஜா வீட்டிலேயே அனைத்து பாடல்களையும் கம்போஸ் செய்து வருகிறார்.

விரைவில் தனியாக ஒரு ஸ்டுடியோ இவர் அமைப்பார் என எதிர்பார்க்க்கப்படுகிறது

பாருங்க:  அதிக பட்ச விலையில் 70 சதவீதம் வரி! குடிகாரர்களுக்கு அதிர்ச்சி அளித்த முதல்வர்!