இளையராஜா- யுவன் இணைந்து இசையமைத்த மாமனிதன் படத்தின் இசைவெளியீடு தேதி

இளையராஜா- யுவன் இணைந்து இசையமைத்த மாமனிதன் படத்தின் இசைவெளியீடு தேதி

தமிழ் சினிமாவில் எத்தனையோ இசை சாதனைகளை படைத்துள்ள  இசைஞானி இளையராஜா அவர்கள் இதற்கு முன் எம்.எஸ்.வி அவர்களுடன் மெல்ல திறந்தது கதவு, செந்தமிழ் செல்வன், விஸ்வ துளசி படங்களில் இசையமைத்துள்ளார்.

முதன்முறையாக தனது மகன் இசையமைப்பாளர் யுவனுடன் சேர்ந்து இசையமைத்திருக்கும் படம் மாமனிதன்.

சீனு ராமசாமி இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இப்படத்தின் ஆடியோவை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த படத்தின் ஆடியோ வெளியீடு வரும் 16ம் தேதி நடக்கிறது.