இசைஞானியின் ஸ்டுடியோவுக்கு விசிட் அடித்த ரஜினிகாந்த்

32

இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசாத் ஸ்டுடியோவில் தனது ஸ்டுடியோவை நடத்தி வந்தார். எண்ணற்ற பாடல்களை அவர் இங்கு இருந்துதான் கம்போஸ் செய்தார்.

நாம் கேட்கும் இளையராஜாவின் பாடல்கள் பல பிரசாத் ஸ்டுடியோவில் இருந்துதான் உருவானது.

இந்த நிலையில் சில மாதங்களாக பிரசாத் ஸ்டுடியோவுடன் ஏற்பட்ட மோதலால் இசைஞானி அங்கு இருந்து காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நடந்த நிலையில் , இளையராஜா சென்னை தி நகரில் அவர் பெயரிலேயே ஒரு ஸ்டுடியோவை துவங்கினார்.

சில நாட்கள் முன் தொடங்கப்பட்ட இந்த ஸ்டுடியோவில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று விசிட் அடித்து பார்வையிட்டார்.

பாருங்க:  இது மட்டும் ஆண்மைத்தனமா? - இசைஞானிக்கு எதிராக பொங்கும் நெட்டிசன்கள்