நேற்று முன் தினம் பாடகர் பாடகர் எஸ்.பி.பி மறைந்தார்.அவர் சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் இருந்தபோது அவருக்காக கடும் பிரார்த்தனைகள் நடைபெற்றது.
திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்காக கடும் பிரார்த்தனைகளை வைத்த நிலையில் அது வீடியோக்களாக சமூக வலைதளங்களில் வெளியானது.
இசையமைப்பாளர் இளையராஜாவும் தன்னுடைய நெருங்கிய நண்பர் எஸ்.பி.பிக்காக ஒரு வீடியோ வெளியிட்டார் அதில் உருக்கமாக பேசிய இளையராஜா எழுந்து வா என கான்பிடண்ட்டாக பேசி இருந்தார்.
இந்த வீடியோ எஸ்.பி.பிக்கு காண்பிக்கப்பட்டபோது அதை முத்தமிட்டாராம் அவர். அவர் உடல் நிலை முன்னேற்றத்திற்கு இது போல வீடியோக்கள் காரணமாய் இருந்தது. இருப்பினும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது என மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே மறைந்த தன் நண்பர் எஸ்.பி.பிக்காக நேற்று திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் இளையராஜா மோட்ச தீபம் ஏற்றினார்.