Connect with us

இளையராஜா, ரஹ்மான் பதிவுகளுக்கு பிறகு யுவன் போட்ட அதிரடி பதிவு

Latest News

இளையராஜா, ரஹ்மான் பதிவுகளுக்கு பிறகு யுவன் போட்ட அதிரடி பதிவு

மத்திய அமைச்சர் அமித்ஷா ஹிந்தி பேசுவதை ஆதரிக்கிறார் அதை மற்ற மாநிலங்களில் திணிக்க பார்க்கிறார் என பலரும் விமர்சனம் வைத்த நிலையில் நம்ம இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானும் தன்  பங்குக்கு தமிழணங்கே என்று ஒரு போஸ்டர் போட்டு அதில் தமிழ்த்தாய் தலைவிரிகோலமாக இருப்பது போன்று டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார் இந்த பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்த நிலையில்

அடுத்ததாக இசைஞானி இளையராஜா , பிரதமர் மோடியை அம்பேத்காரோடு ஒப்பிட்டு பேசினார் என சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் எழுந்தது.

இந்த பிரச்சினைகள் சற்று தணிந்து வரும் நிலையில் இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் தன் பங்குக்கு ஒரு பதிவை மேற்கொண்டுள்ளார்.

அதில் கருப்பு திராவிடன்; பெருமைக்குரிய தமிழன்! என அடுத்த விவாதத்தை எடுத்து சென்றுள்ளார் யுவன்.

 

பாருங்க:  வைரலாகி வரும் யுவன் விஜய் புகைப்படம்

More in Latest News

To Top