Published
1 year agoon
சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற மாணவனின் யூ டியூப் சேனல் மிக பிரபலம். பிரபல இசையமைப்பாளர்கள் அந்த காலத்தில் வாசித்த இசையை கேட்டு அதை அப்படியே வாசிக்கும் திறன் பெற்றவர்.
இசைத்துறையில் பல சர்வதேச விருதுகளை மிக குறைந்த வயதிலேயே வென்றவர். ரஷ்யாவில் நடந்த உலக அளவிலான இசைப்போட்டி ஒன்றில் 75 லட்சம் பரிசை வென்றார் இவர்.
இதற்காக இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இவர் வீடு தேடி சென்று பாராட்டினார்.
இசைஞானி இளையராஜாவும் இவரிடம் அதிக அன்பு பாராட்டுவார். நிறைய இசைக்கோர்வைகளை கற்றுக்கொடுப்பார்.
இந்நிலையில் இன்று லிடியன் நாதஸ்வரம் கூறி இருப்பதாவது.
அன்பர்களே, எனது இசை ஆசிரியர் “மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா மாமா” அவர்கள் அனுபவத்தில் நான் அவருடைய முதல் மற்றும் ஒரே மாணவன் என்று கூறியதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். …உங்கள் அனைவரின் ஆசிகளும் எனக்கு வேண்டும்..அனைவருக்கும் நன்றி.