Published
11 months agoon
திரைப்பட இயக்குனர் ரஞ்சித் இவர் ஜாதிய ரீதியாக படம் இயக்குகிறார் என்ற பஞ்சாயத்து நீண்ட நாட்களாக உள்ளது. அடிக்கடி இவர் பேசுவதும் சர்ச்சைக்குரிய விசயமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இளையராஜா மோடி ஒப்பீடு குறித்து இவர் கருத்து கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் ஜாதி மதத்துக்கு எதிரான மாடலை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் இளையராஜாவை வைத்து அதை கலைக்கும் முயற்சியில் பாரதிய ஜனதா ஈடுபட்டு வருகிறது என ரஞ்சித் கூறியுள்ளார். மேலும் ஈவிகேஎஸ் இளையராஜவை விமர்சித்தற்கு பதில் கூறியுள்ள ரஞ்சித்,
பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே’ என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது என ரஞ்சித் கூறியுள்ளார்.