இளையராஜா விவகாரம்- ஈவிகேஎஸ் மற்றும் வீரமணி மீது வழக்கு பதிவு செய்ய எஸ்.சி எஸ்.டி ஆணையம் உத்தரவு

இளையராஜா விவகாரம்- ஈவிகேஎஸ் மற்றும் வீரமணி மீது வழக்கு பதிவு செய்ய எஸ்.சி எஸ்.டி ஆணையம் உத்தரவு

இளையராஜா சமீபத்தில் எழுதிய ஒரு புத்தகத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து இருந்தார். குறிப்பாக பிரதமர் மோடியையும், அம்பேத்காரையும் இளையராஜா ஒப்பிட்டு பேசியது பலரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

பல இடதுசாரி கருத்து கொண்டவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. அது எப்படி அம்பேத்கரோடு இளையராஜா ஒப்பிட்டு பேசலாம் என தேவையில்லாமல் கோபப்பட்டனர். அவர் கருத்தை சொல்கிறார் என விடவில்லை.

இதில் உச்சகட்டமாக காங்கிரஸ் தமிழக முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதுதான் மிகவும் மோசமாக இருந்தது. அது எப்படி இளையராஜா அப்படி பேசலாம் என ஜாதிய ரீதியாகவும் இளையராஜாவை மோசமாக பேசினார். உனக்கு 70 வயதுக்கு மேலாகி விட்டது நீ இன்னும் இளையராஜாவா என்றேல்லாம் பேசினார். மேலும் ஜாதிய ரீதியாக தவறாக பேசினார்.

இதை மேடையில் உட்கார்ந்து இருந்த திராவிட கழக தலைவர் கி.வீரமணியும் கண்டிக்கவில்லை.

இந்த நிலையில் இதை பார்த்த தேசிய எஸ்,சி எஸ்டி ஆணையம் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.