என் வேலையை தொந்தரவு செய்கிறார்கள் – பிரசாத் ஸ்டுடியோ மீது இளையராஜா புகார்

202
ilayaraja

தனது பணியினை தொந்தரவு செய்வதாக சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ மீது பிரபல இசையமைப்பாளர் இளையராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த 40 வருடங்களாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா தான் இசையமைக்கும் திரைப்படங்களுக்கு ஒலிப்பதிவு பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், அந்த அறையில் சில மேசைகளை போட்டு சுமார் 20 கம்ப்யூட்டர்களை வைத்து வேறு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இது இசையமைக்கும் பணிக்கு இடையூறாக இருக்கிறது. எந்த முன்அறிவிப்பும் இன்றி ஸ்டுடியோவை அத்து மீறி பயன்படுத்துவதாக இளையராஜா தரப்பில் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாருங்க:  பெண் உடை மாற்றுவதை எட்டி பார்த்த நபர் - கணவர் செய்த வெறிச்செயல்