என் தாய் தந்தை செய்த புண்ணியம்- சூரி பெருமிதம்

23

சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் இளையராஜாவின் பிறந்த நாளான நேற்று பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் நடிகர் சூரியும் தனது வாழ்த்தை கூறியுள்ளார் அவர் கூறியிருப்பதாவது.

இசைஞானி ஐயாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்த தருணம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது. கோடிக்கணக்கான ரசிகர்களின் பிணி தீர்க்கும் இசை மருத்துவர் இசையமைக்கும் திரைப்படத்தில் நான் கதைநாயகனாக நடிப்பது என் தாய் தந்தை செய்த புண்ணியம். இசை க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

இவ்வாறு சூரி கூறியுள்ளார்.

பாருங்க:  இளையராஜா கோபத்துக்கு பதில் கூறிய இசையமைப்பாளர் - வீடியோ பாருங்க
Previous articleகலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குஷ்பு
Next articleகலைஞரின் உதவியாளர் சண்முகநாதனை சந்தித்த உதயநிதி