நடிகை ரம்யா நம்பீசனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சிறந்த நடிகையாக சேதுபதி, ராமன் தேடிய சீதை என பல படங்களில் நடித்து விட்டார். இளையராஜாவின் இசையில் சில பாடல்களை பாடி இருக்கிறார். இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகையான இவர் சொந்தமாக யூ டியூப் சேனல் வைத்து சில பாடல்களை பாடி விசுவலாக வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இளையராஜா இசையமைத்து கடந்த 1985ம் ஆண்டு வெளியான தம்பிக்கு எந்த ஊரு படத்தில் வரும் என் வாழ்விலே வரும் அன்பே வா பாடலை பாடி அசத்தியுள்ளார் ரம்யா. மேலும் பல பாடல்களை பாடியுள்ளார்.
இந்த பாடல் யூ டியூப்பில் பிரபலமாகி வருகிறது.