இளையராஜாவுடன் ஆயிரக்கணக்கான படங்களில் பணியாற்றிய கிடாரிஸ்ட் மரணம்

16

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுடன் பல ஆயிரக்கணக்கான படங்களில் பணியாற்றியவர் திரு சசிதரன் முனியாண்டி. இவர் இளையராஜா இசையமைக்கும் படங்களில் பேஸ் கிடாரிஸ்ட்டாக பணியாற்றினார்.

என்னுள்ளே என்னுள்ளே, சின்ன சின்ன வண்ணக்குயில், வானிலே தேனிலா உள்ளிட்ட பல எண்ணற்ற இளையராஜாவின் முக்கிய பாடல்களுக்கு பேஸ் கிடார் வாசித்தவர் இவர்.

இளையராஜாவின் சொந்த மைத்துனர் இவர். இளையராஜாவின் மனைவியின் சகோதரர். நேற்று முன் தினம் இவரது பிறந்த நாள் ஆகும். பிறந்த நாள் அன்று மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவரது உயிரிழப்பு இளையராஜா ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாருங்க:  பிரசாத் ஸ்டுடியோ சென்று தியானம் செய்ய இளையராஜா கோரிக்கை