Entertainment
அரச பட்டத்தை துறந்த இளவரசி
காதல் மிக புனிதமானது என்று சொல்கிறார்கள், பணம் பதவிக்கு அப்பாற்பட்டு ஒருவர் மனதை புரிந்து வாழ்வதே சிறந்த காதல் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறந்த காதலுக்கு எடுத்துக்காட்டாக ஒருவர் திகழ்ந்துள்ளார் அவர்தான் ஜப்பானிய இளவரசி மாகோ.
ஜப்பானிய அரசகுல வழக்கப்படி அரச குடும்ப சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படவேண்டும் அதை விடுத்து சாமானியர் ஒருவரை திருமணம் செய்தால் பதவியை துறந்து விட வேண்டியதுதான்.
அந்த வகையில் தன் கல்லூரி காதலனை மணந்து கொள்வதற்காக ஜப்பானிய இளவரசி மாகோ என்பவர் தன் அரச பட்டத்தை துறந்துள்ளார்.
இந்த செய்திகள் சர்வதேச மீடியாக்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.