தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற பிரதமர் மோடி உதவியுள்ளார் என அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பார் இளங்கோவன் தோல்வி அடைந்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன் ‘ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற மோடி உதவியுள்ளார். பாஜகவினராகிய தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் மீது இல்லாத காதல் பன்னீர் செல்வத்தின் மீது மட்டும் இருப்பது ஏன் என தெரியவில்லை” என அவர் தெரிவித்தார்.