Latest News
இடுக்கு பிள்ளையார் கோவில் திருவண்ணாமலை
பஞ்சபூத ஸ்தலங்களில் புகழ்பெற்ற ஸ்தலம் திருவண்ணாமலை. பஞ்சபூத ஸ்தலங்களில் இந்த ஸ்தலம் அக்னி ஸ்தலம் என அழைக்கப்படுகிறது.
இந்த ஊரில் மலையை சிவமாக கருதுவதால் மலையை சுற்றி தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.
இங்குள்ள கிரிவல பாதையில் ஒவ்வொரு ஸ்வாமியாக நாம் தரிசனம் செய்து வரும்போது நாம் இந்த இடுக்கு பிள்ளையாரை பார்க்காமல் கிரிவலம் முடியாது.
கிரிவலப்பாதையில் உள்ள இந்த விநாயகர் கோவில் மிகச்சிறிய கோவில்தான் ஆனால் உள்ளே குகை போல ஊர்ந்து சென்றுதான் வணங்க முடியும்.
சிறிய வழி ஒன்றில் உடலை உள்ளே நுழைத்து தான் இந்த கோவில் செல்ல முடியும்.
குபேர லிங்கத்துக்கு அருகில் இந்த கோவில் உள்ளது. திருவண்ணாமலை கிரிவலம் சென்றால் இந்த கோவிலை வணங்க மறவாதீர்கள் இது கொஞ்சம் வித்தியாசமான கோவில்.